நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான தடகளப் போட்டி : கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி பதக்கம் வென்றது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான தடகளப் போட்டி :
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி பதக்கம் வென்றது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் 29.10.2025 முதல் 31.10.2025 அன்று வரை நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் கோவில்பட்டி கே.ஆர். கல்லூரியின் மாணவர் மாதேஷ் நீளம் தாண்டும் போட்டியில் 6.82 மீட்டர் தாண்டி பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

அஸ்வினி 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 19.2 வினாடியில் கடந்து இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

ரேணுகா ஈட்டி எறியும் போட்டியில் 25.65 மீட்டர் எறிந்து பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார் மற்றும்100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 20.2 வினாடியில் கடந்து மூன்றாம் இடம் பெற்று வெங்கலப் பதக்கம் வென்றார்.

விஜிதா நீளம் தாண்டும் போட்டியில் 4.21 மீட்டர் தாண்டி பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம் பெற்று வெங்கலப் பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்.