தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த தின விழா
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
பாரதியார் பிறந்தநாள் டிசம்பர் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயாபுரத்தில் பாரதி பிறந்தார்.
பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து பாரதியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கணித பயிற்சி ஆசிரியை திவ்யா பாரதியாரின் வாழ்க்கை, விடுதலைப் போரில் அவரின் பங்களிப்புகள், பெண் விடுதலை மற்றும் கவிதை சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவிதை , ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, விஜி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஆசிரியை இந்து இசக்கி நன்றி கூறினார்.












