தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டம் மாற்றியமைப்பு : மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழு அமைப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டம் மாற்றியமைப்பு : மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழு அமைப்பு :
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !க

தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டங்களை மறுவடிவமைப்பு செய்வதற்காக, இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

பாடத்திட்ட வடிவமைப்பு குழுவிற்கு டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை வகிப்பார். இந்தக் குழுவில் அறிவியல், வரலாறு, தமிழாய்வு மற்றும் பல்வேறு கல்வித்துறை சார்ந்த 17 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய குழுவில் இடம்பெற்றுளவர்கள் விவரம் :

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (குழுத் தலைவர்),

2.அறிவியல் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்,

3.சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ரீட்டா ஜான்,

4.மாநிலக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் எம்.சுதந்திரமுத்து,

5.சென்னை பல்கலைக்கழகத்தின் தாவிரவியல் துறை முன்னாள் தலைவர் என்.மதிவாணன்,

6.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியர் டி.அசோகன்,

7.புதுடெல்லியை சேர்ந்த ஐடி நிபுணர் எஸ்.ஏஞ்சல் ரத்னாபாய்,

8.ஆங்கில மொழி கற்பித்தல் நிபுணர் உமா ராமன்,

9.மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் முதல்வரும், கணிதவியல் நிபுணருமான பி.மகாவீர்,

10.பிரபல ஓவியர் மணியம் செல்வன்,

11.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்று பேராசிரியர் கே.ராஜன்,

12.சென்னை திருநீர்மலை மகரிஷி வித்யா ம்ந்திர் கல்வியாளர் ஆர்.சந்தன தேவன்,

13.நாமக்கல் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் எம்.செல்வம்,

14.விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப்,

15.கல்வி உரிமை ஆர்வலரும், தவெக செய்தித் தொடர்பாளருமான கே.எஸ்.டி. ஆனந்த் அஜித் மகியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

16. எஸ்சிஇஆர்டி கவுன்சில் இயக்குநர்,

17.பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, 4ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடங்களை, தற்போதைய புதிய கல்வித் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்த பரிந்துரைகளை அளிக்கும்.

இங்கே பதிவிறக்கம் செய்யவும்

👇👇👇👇👇👇👇

curriculum committee G.O