அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி !
தமிழக உயர்கல்வித் துறை செயலர் அருண்ராய் வெளியிட்ட அரசாணை:
நடப்பு (2026-27) கல்வி ஆண் டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் தேவையுள்ள கலைப் பாடப்பிரிவுகள், ஆய்வக வசதிக்கு ஏற்ப அறிவியல் பாடப்பிரிவுகள் 20 சதவீதம் கூடு தல் மாணவர் சேர்க்கை அளிப்பது.
அதேபோல, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தேவையுள்ள கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு 10 சதவீதமும், தனியாா் சுயநிதி கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு 10 சதவீத மாணவர் சேர்க்கை. அளிப்பது.
அரசு மற்றும் பொதுத்துறை வேலைகள்
சம்பந்தபட்ட பல்கலைக்கழகங்களால் முதன்முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையின் அடிப் படையில் கூடுதல் சேர்க்கையை மேற்கொள்வதற்காக வேண்டும்.
சம்பந்தபட்ட பல்கலைக்கழகங்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும். இந்த கூடுதல் சேர்க்கை அனுமதி நடப்பு கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும். தவிர, கூடுதல் சேர்க்கைக்காக கூடுதல் பணியிடங்கள் கேட்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












