தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பனை விதை நடு விழா

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பனை விதை நடு விழா

கல்லூரிக் கல்வி இயக்குநரகம், திருநெல்வேலி பிரிவு சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்காக “ஆறு கோடி பனைவிதைகள் நட்டிடும் பனைமரக் காப்பு இயக்கம்” தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறை சார்பில் இன்று மதியம் 3.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் பனைவிதை நடு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத் தலைவர் அருட்சகோதரி முனைவர். ஆரோக்யை ஜெனீசியஸ் அல்போன்ஸ், துறை பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மாணவிகள், தாவரவியல் துறையிலிருந்து பனைவிதைகள் பெற்றுக்கொண்டு, தங்களது பகுதியில் உள்ள நீர்நிலைகளின் அருகில் அவற்றை நட்டிடுமாறு தாவரவியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.