தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாடு மற்றும் எரிசக்தி தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாடு தினம் மற்றும் தேசிய எரிசக்தி தினமானது தலைமை ஆசிரியர் அருட் சகோதரி சகாய ஹேமலதா ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

மாணவி பைரவி பிறந்தநாள் பரிசாக நூலகத்திற்கு புத்தகத்தை வழங்கினாள். மாணவி ஸ்ரீ ஹரிணி தேசிய மாசு கட்டுப்பாடு தினத்தைப் பற்றியும், மாணவி சில்வியா தேசிய எரிசக்தி தினத்தைப் பற்றியும் சொற்பொழிவு ஆற்றினாள். மாணவிகள் வீதி நாடகம் மூலம் பசுமையும் பாரம்பரியத்தை சிறப்பித்தார்கள்.
மேலும்மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.













