குமரி முதல் சென்னை வரை பசுமை விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி
இயற்கை அன்னையை காப்போம், நெகிழியை முற்றிலும் ஒழிப்போம் என்பதனை வலியுறுத்தி மேற்கொள்ளும்
மிதிவண்டி பசுமைப்பயணப்பேரணியை தமிழக துறவியர் பேரவை, அய்க்கஃப் கல்லூரி மாணவர் இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து நடத்துகின்றனர்.
குமரி முதல் சென்னை வரை நடத்தும் பசுமை பயணம் மிதிவண்டி பேரணியானது5 ம் தேதி குமரியில் தொடங்கி நேற்று 7 ம் தேதி தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது.

இவ்விழாவிற்கு வருகை புரிந்து அனைவரையும் வாழ்த்தி வரவேற்புரை வழங்கினார் தூத்துக்குடி துறவியர் பேரவை தலைவர் அருட் தந்தை மரிய சிங்கராயர் சே.ச. தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் டி.டி தலைமை ஏற்றார்.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இ.ஆ.ப கலந்து கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப வாழ்த்துரை வழங்கினார்.மற்றும் தமிழக துறவியர் பேரவை தலைவி அருட்சகோதரி மரிய பிலோமி எஃப் பி எஸ் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு பாடல், நாடகம் மூலம் பசுமை விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

மேலும் இந்த மிதிவண்டி பேரணி ஆனது ரோச் விக்டோரியா கார்னரில் தொடங்கி ஜார்ஜ் சாலை, தெற்கு காட்டன் சாலை, மேற்கு கிரேட் காட்டன் சாலை, கடற்கரை சாலை, தூய மரியன்னை கல்லூரி, திரேஸ்புரம், இஞ்ஞாசியார்புரம், மதுரை ரோடு வரை தொடர இருக்கிறது.
இவ்வாறு நடைபெறும் இப்பேரணி முதலில் தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர்,அருட்சகோதரிகள்,ஆசிரியர்கள் மற்றும்மாணவியர் இணைந்து வாழ்த்திட பயணம்தொடங்கி, பின்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று பசுமை விழிப்புணர்வு அளித்தது. மேலும் இத் தொடக்க விழாவானது சிறப்பாக நடைபெற்றதற்காக, நிறைவு உரை வழங்கினார் வீராங்கனை இயக்கம் நிறுவனர், பேராசிரியை. பாத்திமா பாபு.
தூத்துக்குடி துறவியர் பேரவை துணைத்தலைவி அருள் சகோதரி ஜெஸ்ஸி எம் எஸ் எஸ் எம் முடிவுரை வழங்க விழாவானது நிறைவுற்றது.













