கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் சார்பாக பள்ளியில் மாணவர்களுக்கு 100 மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வாரியாக நடத்தப்பட்டது.
தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளித் தலைவர் மற்றும் செயலர் அய்யனார் தலைமை தாங்கினார். காவல் உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், சண்முகம், சந்தனமாரி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தனமாரி மாணவர்களுக்கு நல்லொழுக்கம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சிவசண்முகஅரவிந்த் செய்திருந்தார்.












