தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு முன்னிலையில் வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர்மரிய நேவிஸ் சோரீஸ் தேசியக் கொடியை ஏற்றினார்.

இயற்பியல் துறைத் இணைப் பேராசிரியர்கள் முனைவர். ஜான் பிரின்ஸ் சௌந்திர நாயகம் மற்றும் முனைவர். நாகராஜன், ஆகியோர் குடியரசு தின சிறப்புரையாற்றினார்கள்.

குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.