வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமா? வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமா? வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் காலை 11.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா அருகே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.