தூத்துக்குடி ஏ. பி. சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

தூத்துக்குடி ஏ. பி. சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் கணினி துறை மதுரை Genfotech Innovations நிறுவனத்துடன் இணைந்து “வணிகத்தில் செயற்கை நுண்ணறிவு – தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இணைப்பு” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கத்தை 19.09.2025 அன்று நடத்தியது.

இக்கருத்தரங்கம், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி வணிகத் திட்டங்களிலும் மேலாண்மை முறைகளிலும் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், மொத்தம் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 350 மாணவிகள் பங்கேற்றனர்.

டாக்டர் .சிவரத்தினமோஹன் , இணை பேராசிரியர் ஸிம்பியோசிஸ் – மேலாண்மை ஆய்வு மையம், பெங்களூரு இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ” வணிகம் மற்றும் மேலாண்மையில் “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதுமைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


தெய்வம் அண்ணாமலை , துணைத் தலைவர் – தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் , ஜாக்ஸ் தொழில்நுட்ப சேவைகள், பெங்களூரு, சரவண பாண்டியன், முதுநிலை உட் பதிப்பாளர் ,ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், மதுரை மற்றும் ராம் சுந்தர் எசக்கியப்பன் , உதவித் துணைத் தலைவர், ஜேபி மோர்கன் சேஸ் & கோ, பெங்களூரு போன்ற கணினி துறை வல்லுநர்கள் பேச்சாளர்களாக வந்து தொழில், உலக சந்தை போக்குகள், திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் யுகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் போன்றவை பற்றி உரையாற்றினர்.

மேலும், போட்டித்தன்மையுள்ள வேலை சந்தையில் தங்களுக்கான சிறப்பான இடத்தைப் பெறவும் தனித்து நிற்கவும் மாணவர்கள் வளர்க்க வேண்டிய முக்கியமான திறன்களை பற்றியும் அவர்கள் வலியுறுத்தினர்.

மகாலட்சுமி பெண்கள் கல்லூரியின் முதல்வர் கணினி அறிவியல் துறையின் முயற்சிகளை வெகுவாக பாராட்டியதோடு மாணவர்களை செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் எதிர்காலத்தின் சவால்களுக்கு தயாரிப்பதற்காக தொழில்நுட்பத்தையும் மேலாண்மை கல்வியுடனும் இணைப்பது முக்கியம் எனவும் வலியுறுத்தினார்.

உற்சாகமான கேள்வி-பதில்கள் அமர்விற்குப்பின், பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு இக்கருத்தரங்கு நிறைவேறியது.