முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ ( CAT ) தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ ( CAT ) தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு

முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர்​வதற்​கான கேட் நுழைவுத் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் செப்​டம்​பர் 20-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டு உள்​ளது.

தேசிய அளவில் முன்​னிலை​யில் உள்ள ஐஐஎம் போன்ற உயர்​கல்வி நிறு​வனங்​களில் முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர பொது நுழைவுத் தேர்​வில் (Common Admission Test-CAT) தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த ஆண்​டுக்​கான ‘கேட்’ தேர்வு நாடு முழு​வதும் 170 மையங்​களில் நவம்​பர் 30-ம் தேதி கணினி வழி​யில் நடை​பெற உள்​ளது. இத்​தேர்வை கோழிக்​கோடு ஐஐஎம் நடத்​துகிறது.

காலை 8.30-10.30, மதி​யம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்​தம் 3 அமர்​வு​களாக தேர்வு நடை​பெறும்.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ல் தொடங்கி செப்​டம்​பர் 13-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இந்​நிலை​யில், மாணவர்​கள் நலன்​கருதி விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் செப்​டம்​பர் 20-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. விருப்​பம் உள்ள பட்​ட​தா​ரி​கள் https://iimcat.ac.in எனும் வலை​தளத்​தில் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

இதற்கு கட்​ட​ண​மாக எஸ்​சி, எஸ்டி பிரி​வினர், மாற்​றுத் திற​னாளி​கள் ரூ.1,300, மற்ற தேர்​வர்​கள் ரூ.2,600 செலுத்த வேண்​டும்.

தகு​தி​யானவர்​களுக்கு ஹால் ​டிக்​கெட் நவம்​பர் 5-ம் தேதி வெளி​யிடப்பட உள்​ளது.தேர்வு முடிவு​கள் ஜனவரி முதல் வாரத்​தில் வெளி​யிடப்​படும் என்று துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

குறிப்பு :

CAT தேர்வு (பொது சேர்க்கைத் தேர்வு) என்பது, இந்தியாவில் உள்ள முதன்மையான மேலாண்மை நிறுவனங்களில் (Indian Institutes of Management – IIMs) முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் ஒரு கணினி அடிப்படையிலான திறனாய்வுத் தேர்வாகும். இந்தத் தேர்வு, விண்ணப்பதாரர்களின் வாய்மொழித் திறன், அளவுத் திறன், மற்றும் தரவு விளக்கம், தர்க்கரீதியான பகுத்தறிவு போன்ற திறன்களை மதிப்பிடுகிறது.

The CAT – 2025

Exam date is Sunday, November 30, 2025. It will be conducted by IIM Kozhikode and will have three slots: morning, afternoon, and evening. Registration for the exam started on August 1, 2025, and the last date to apply was September 20, 2025.
Key Dates for CAT 2025
Exam Date: November 30, 2025
Registration Start Date: August 1, 2025
Registration Last Date: September 20, 2025
Official Website: iimcat.ac.in