கோவில்பட்டி கே.ஆர்.கல்லூரி மாணவர், தென் மண்டல பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தேர்வு 12.12.2025 அன்று செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, பாளையம்கோட்டையில் நடைபெற்றது. இப்போட்டியில் இரண்டாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவர் வேம்புராஜ் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
28.01.2026 முதல் 05.02.2026 வரை கர்நாடக மாநிலம் மைசூர்ரில் உள்ள ஜே.எஸ்.எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவனை, கல்லூரியின் தலைவர், துணைத் தலைவர், கல்லூரியின் செயலர், முதல்வர், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.












