இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் 1994 முதல் 2003 ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்தவர் கஸ்தூரி ரங்கன் என்ற கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன். ஜிஎஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் பெங்களூரில் வசித்து வந்த கஸ்தூரி ரங்கன்( 84 )வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்.
மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ள கஸ்தூரி ரங்கன் பத்மஸ்ரீ ( 1982 ),பத்மபூஷன் ( 1992 ) மற்றும் பத்ம விபூஷன் ( 2000 ) விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது












