திருச்செந்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு நிகழ்வு !

திருச்செந்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு நிகழ்வு !

பள்ளி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் பள்ளி 75 சதவீதம் பெற்றோர்கள், தலைமையாசிரியர்,ஆசிரியர் பிரதிநிதி, உள்ளாட்சி பிரதிநிதிகள்,கல்வியாளர் மற்றும் முன்னாள் மாணவர்களை உறுப்பினர்களாக கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் இயங்கி வருகின்றன.

மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் கருத்துக்கள் வழங்கும்போது

பள்ளி மேலாண்மை குழுக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் செயல்முறை கடிதத்தின் படியும்,மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின்படியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி ஆலோசனையின்படி திருச்செந்தூர் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 14 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில்2026 -2028 ஆண்டுகளுக்குரிய பள்ளி மேலாண்மை குழுக்களை அமைப்பதற்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் கருத்துக்கள் வழங்கும் போது…

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி டிபி ரோடு நடந்த நிகழ்ச்lசியை மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆகியோர் பாரவையிட்டனர். தலைமையாசிரியை சிவகாமி பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு விதிமுறைகளை எடுத்துக் கூறினார்.

அரசு தொடக்கப்பள்ளி (ஆதிராவிடர் நலத்துறை ) தோப்பூர்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேற்பார்வையாளர் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கிய போது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் மாணிக்கராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி ஆகியோர் வழிகாட்டுதலில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜெயலட்சுமி, ஜெயஹெலன், ஜெகதீஸ் பெருமாள், நபில் புகாரி, அருள்ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.