கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களில் இரத்த தான முகாம்

கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களில் இரத்த தான முகாம்

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வை கல்லூரிகளின் முதல்வர்கள் துவக்கி வைத்தனர்.

கோவில்பட்டி சுகாதார அலுவலர்கள் துளசி லட்சுமி மருத்துவ அலுவலர் ரத்த வங்கி மதுரன் பிரைட்ன், தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் முத்துசாமி, மாவட்ட நல கல்வியாளர் முருகேசன், இளநிலை பூச்சியல் வல்லுநர் கருணாநிதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சசிகணேஷ், சுகாதார ஆய்வாளர் வில்லிசேரி சேவியர், ரத்த வங்கி ஆய்வாளர் ஆகியோரின் மேற்பார்வையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மூன்று கல்லூரிகளை சார்ந்த 64 மாணாக்கர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் இரத்த சேகரிப்பை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வை கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
.