தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் விண்வெளி மற்றும் இலக்கியம் என்ற தலைப்பில் சிறப்புரை
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி 29.08.2025 செவ்வாய்க்கிழமை அன்று
ஆங்கிலத்துறை சார்பாக
மாணவர்களுக்கு “விண்வெளி மற்றும் இலக்கியம்” என்ற தலைப்பில் சிறப்புரையை ஏற்பாடு செய்தது.
திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பாடத்தின் பேராசிரியர் டாக்டர்.பாஸ்கரன் சிறப்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி விண்வெளி மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் சந்திப்பை மையமாகக் கொண்டு நடைபெற்றது. மேலும் சிந்தனை, பண்பாடு மற்றும் அடையாளங்களை உருவாக்குவதில் கதைகளின் சக்தியை வெளிப்படுத்தியது. விமர்சனத் திறன், ஆராய்ச்சித் திறன் மற்றும் எதிர்கால கல்விசார் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.












