தமிழ்நாடு திறன் போட்டிகள் – 2025 செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறன் போட்டிகள் – 2025 செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்

‘தமிழ்நாடு திறன் போட்டிகள் – 2025’ல் பங்கேற்க, வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ என, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

அதுகுறித்த அறிக்கை:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், மாநில இளைஞர்களின் திறமைகளை, உலகத் தரத்தில் வெளிப்படுத்த, ‘டி.என்., ஸ்கில்ஸ் 2025 – திறன் திருவிழா’ போட்டிகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ளன.

இதில் வெற்றி பெறுவோர், ‘இந்தியா ஸ்கில்ஸ் – 2026’ எனும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெறுவர். அதில் வெற்றி பெறுவோர், உலகத் திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.

இணையதளம் :

தனிப்பட்ட திறன் மற்றும் குழு திறன் என, இரு வகையான பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் 30ம் தேதிக்குள், https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.