பல்கலை அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு தாளாளர் வாழ்த்து

பல்கலை அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு தாளாளர் வாழ்த்து

கோவில்பட்டி ஆகஸ்ட் 18. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியை கல்லூரி தாளாளர் விஜயன் வாழ்த்தினார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் .இதில் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவில் பயின்ற மகாலட்சுமி பல்கலைக் கழக அளவில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார்

கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி மற்றும் ஏனைய பேராசியர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.