கன்னியாகுமரி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை… ஜூலை 24, 28 தேதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாது! 2 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
உள்ளூர் விடுமுறை இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படாது. சில தளர்வுகளின் அடிப்படையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் :
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெறும் ஆடிபூர விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 28.07.2025 திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.08.2025 (சனிக்கிழமை) வேலை நாட்களாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












