தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் தூத்துக்குடி ஏ. வி. எம் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் தூத்துக்குடி ஏ. வி. எம் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நலனை நோக்கமாகக் கொண்ட முயற்சியாக வ. உ. சிதம்பரம் கல்லூரியும் தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவமனையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இன்று (15.10.2025) கையெழுத்திட்டுள்து.

புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி கல்லூரி முதல்வர் கூறுகையில் வ. உ. சிதம்பரம் கல்லூரி பவள விழாவை கொண்டாடும் தருணத்தில் எங்கள் வேண்டுகோளுக்கிணங்க, தூத்துக்குடி ஏ.வி.எம் மருத்துவமனை எங்கள் உதவி பெறும் (Aided) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மதிப்புமிக்க மருத்துவ சேவைகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க சம்மதித்துள்ளது.

இத்திட்டத்திற்காக இன்று, புதன்கிழமை, 15.10.2025, வ.உ.சி கல்லூரி மற்றும் தூத்துக்குடி ஏ.வி.எம் மருத்துவமனை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது என்று தெரிவித்தார்.