கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பயிற்சி நடைபெற்றது!
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட அணி எண்:132, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) இணைந்து, தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), 04-வது பட்டாலியன், ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் FAMEX (Familiarization Exercise) மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர். மதிவண்ணன் தலைமையிலும், கோவில்பட்டி வட்டாட்சியர் அப்பனராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர்.கண்ணன் வரவேற்புரையாற்றினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 04-வது பட்டாலியனைச் சேர்ந்த டீம் கமாண்டர் சுரேஷ் சந்த் குமாவத் மற்றும் அவரது குழுவினர் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசரகால மீட்புப் பணிகள், முதலுதவி சிகிச்சை, CPR பயிற்சி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்கங்களை வழங்கினார்கள்.
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர். இந்நிகழ்ச்சி மூலம் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூன்றாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி ஸ்ரீநாகலட்சுமி நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள், நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.












