டெட் தேர்வு குறித்து ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம்; நீங்கள் எங்களுடைய ஆசிரியர்கள் : அன்பில் மகேஷ் பெருமிதம்

டெட் தேர்வு குறித்து ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம்;
நீங்கள் எங்களுடைய ஆசிரியர்கள் :
அன்பில் மகேஷ் பெருமிதம்

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் வெற்றி பெறுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று கோவையில் மாணவர்களுக்கான வேங்கார்ட் அகடாமி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் தெரிவித்ததாவது;

டெட் தேர்வின் ரிவ்யூ பெட்டிஷனில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த வழக்கு வருகிற 19 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இது போன்ற சட்டங்கள் வருவதற்கு முன்பாகவே, தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்ற ஆசிரியர்களுக்கு இது பொருந்தும் என்று கூறுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை.

இது குறித்து யாரும் கவலைபட வேண்டாம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களாகிய உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். யாரும் பயப்பட வேண்டாம். எங்களுடைய ஆசிரியர்கள் நீங்கள், தமிழக ஆசிரியர்களை நாங்கள் பாதுகாக்காமல் வேறு யாரு பாதுகாப்பது ? நிச்சயம் பாதுகாப்போம்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

வீடியோ நன்றி பாலிமர்