10 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான பொதுத் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 22,118 மாணவ, மாணவிகள் எழுதினர்

10 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான பொதுத் தேர்வு:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 22,118 மாணவ, மாணவிகள் எழுதினர்

தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொmதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.

16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.

25 – 03 – 2026 புதன்கிழமை கணிதம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.

30 – 03 – 2026 திங்கட்கிழமை அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.

இன்று 02 – 04 – 2026 வியாழக்கிழமை சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.

இன்றைய தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் 22,118 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில் தேர்வுக்காக பள்ளியில் பயிலும் மாணவர்கள் 22,221பேரும், தனித் தேர்வர்கள் 395 பேர் என மொத்தம் 22,616 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்றைய தேர்வினை 22,118 பேர் எழுதினர்.இதில் மாணவர்கள் 10,938 பேர், மாணவிகள் 11,180 பேர் உள்ளடங்குவர்.

இன்று 498 பேர் தேர்வு எழுத வரவில்லை.  இதில் மாணவர்கள் 363, மாணவிகள் 135 பேர் ஆகும்.

இன்று தூத்துக்குடி புனித மரியன்னை ( St. Mary’s ) ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் A.M.M. சின்னமணி நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் என‌ மொத்தம் 295 மாணவ , மாணவிகள் 290 பேர் தேர்வு எழுதினர்.5 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.