முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : இன்று பொங்கல், காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் :
இன்று பொங்கல், காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது

1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று 07 – 05 – 2025 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 15.09.2022 அன்று மதுரை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

வாரத்தில் 2 நாட்கள்

காலை உணவு திட்டத்தில் இன்று 02 – 06 – 2025 முதல் சிறு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி திங்கள் மற்றும் புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் காலை உணவில் பொங்கல், காய்கறி சாம்பார் வழங்கப்படுகிறது.

திங்கள் கிழமை வழங்கப்பட்டு வந்த ரவா உப்புமா நிறுத்தப்பட்டுள்ளது.

கோதுமை ரவா உப்புமா வியாழக்கிழமை வழங்கப்படும்.

தூத்துக்குடி

அதன்படி இன்று தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை பொங்கல், காய்கறி சாம்பார் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது.