நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி :
கன்னியாகுமாரி ஜெரோம்ஸ் கல்லூரி சாம்பியன்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான வாலிபால் போட்டிகள் 22 மற்றும் 23 செப்டம்பர் 2025 ஆகிய இரண்டு நாட்கள் கோவில்பட்டி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சார்ந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 39 அணிகள் கலந்துகொண்டன.
22.09.2025 அன்று நடை பெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணியும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணியும் மோதின.
இதில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணி 3–0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாம் அரை இறுதிப் போட்டியில் தூத்துக்குடி வி.ஓ.சி கல்லூரி அணியும், கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும் மோதின. இதில் ஜெரோம்ஸ் கல்லூரி அணி 3–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணியும், தூத்துக்குடி வி.ஓ.சி கல்லூரி அணியும் மோதின.
இதில் விவேகானந்தா கல்லூரி அணி 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம் பிடித்தது.

இறுதி போட்டியில் கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணியும் மோதின. இதில் ஜெரோம்ஸ் கல்லூரி அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பிடித்தது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற் கல்வி இயக்குனர் முனைவர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் கே.ஆர். கல்வி நிறுவங்களின் தாளாளர், நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி, கேஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குனர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.












