தேசிய நூலகர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது !

134வது தேசிய நூலகர் தின விழாவை முன்னிட்டு கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேசிய டிஜிட்டல் நூலகம் மற்றும் வினாடி வினா மன்றம் இணைந்து நூலகத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்ற உயரிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதற்காக பல்வேறு துறை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு தமிழ் சொல்லெழுதுதல், ஆங்கிலம் சொல்லெழுதுதல் நூல் மதிப்புரை, பேசாமல் செயல்கள் மூலம் ஒரு வார்த்தையை கண்டறிதல், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
தேசிய டிஜிட்டல் நூலகம் மன்றம் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவர் சிறப்புரை வழங்கினார். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் நூலகர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

குறிப்பு:-
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாள் இந்தியாவில் தேசிய நூலகர் தினம் (National Librarians’ Day) கொண்டாடப்படுகிறது.
இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதனின் பிறந்தநாளைப் போற்றும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.













