தென்காசி, அகரக்கட்டு ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் !

தென்காசி, அகரக்கட்டு ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் !

தென்காசி, அகரக்கட்டு ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண்:192,202 சார்பாக 28:08:2026 இன்று போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது.

இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் 80 பேர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் முனைவர்.பால்மகேஷ் உதவிப்பேராசிரியர்வணிக நிர்வாகத்துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. போதைப்பொருள் விழிப்புணர்வு என்ற தலைப்பில் உரையாற்றினர்.

இந்நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய கல்லூரி தாளாளர் அருட்சகோதரி முனைவர்.ஆரோக்கியமேரி கல்லூரி நிர்வாகி அருட்சகோதரி ஜீட் லிசா மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர். சிவநேசன் கலந்து கொண்டனர்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா என்ற கோமு முனைவர். பேச்சிமுத்து ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்து நடத்தி முடிக்கப்பட்டது.