பத்தாம் வகுப்பு பொது தேர்வு மறு கூட்டல் /மறு மதிப்பீடு முடிவுகள் ஜூலை 6ஆம் தேதி வெளியிடப்படும் : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு !

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மறு கூட்டல் /மறு மதிப்பீடு முடிவுகள் ஜூலை 6ஆம் தேதி வெளியிடப்படும் :
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு !

தமிழ்நாடு 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வுகள் 2026- மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்றன. இதன் தேர்வு முடிவுகள் மே 20, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

இதில் விடைத்தாள் எளிதில் பெற்ற தேர்வர்கள் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர் .அதற்கான கால அவகாச 17 -06 -2006 முதல் 23 0 – 6 – 2026 வரையிலும் பின்னர் தேர்வர்களின் நலன் கருதி 25 – 06 – 2026 அன்று ஒரு நாளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு / மறுகூட்டல் கோரி பாடவாரியாக பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 8,682 , இதில் மறு மதிப்பீடு செய்த தேர்வர்கள் எண்ணிக்கை 7,931 மறு கூட்டல் விண்ணப்பித்த மாணவர்கள் – 751 ஆகும்.

அதனைத் தொடர்ந்து அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர் குழுவினரை கொண்டு விடைத்தாள்கள் மறுமதிப்பீடு / மறு கூட்டல் செய்திடும் பணி 25 – 06 – 2026 அன்று தொடங்கி 04 – 07 – 20 அன்று நிறைவு பெற்றது .

தற்போது மறு கூட்டல் ( Re – Total) மற்றும் மறுமதிப்பீடு( Revaluation ) விண்ணப்பித்தவர்களுள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் ஜூலை 06 – 2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.

இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மறு கூட்டல் / மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ( provisional Mark Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேற்க்கான் பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு 94983 – 83075 , 94983 – 83076 என்ற கைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇

SSLC MAR APR 2026 RV RT RESULT RELEASE RELATED PRESS RELEASE 04 07 2026