இடை நிற்றல் மாணவர்களுக்கான சேர்க்கை முகாம்

இடை நிற்றல் மாணவர்களுக்கான சேர்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் படிப்பில் இடை நின்ற மாணவர்களுக்கான சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி – வேப்பலோடை, அரசினர் மகளிர் பாலிடெக்னிக் – எட்டயபுரம் .தேவனேசம் பாலிடெக்னிக் – வேம்பார், கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி – முள்ளக்காடு, ஜெயா பாலிடெக்னிக் கல்லூரி -சாயர்புரம், சாண்டி தொழிற் பயிற்சி பள்ளி – முத்தையாபுரம், தமிழ் மகளிர் கல்வி நிறுவனம் -விளாத்திகுளம், சுந்தரம் அருள்ராஜ் செவிலியர் கல்லூரி – தூத்துக்குடி, செயிண்ட் தாமஸ் கல்வியியல் கல்லூரி – தூத்துக்குடி, கீதா ஜீவன் கலைக்கல்லூரி -குறுக்குச்சாலை போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து நேரடி சேர்க்கைக்காக வந்திருந்தனர்.

தூத்துக்குடி அன்னை ஜூவல்லர்ஸ் மற்றும் அதானி பவுண்டேஷன் ஆதரவில் இந்த முகம் சிறப்பாக நடைபெற்றது.

முகாம் ஏற்பாடுகளை  பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்டன் ரூபன், உதவி தலைமை ஆசிரியை சுமதி மற்றும் சக ஆசிரியை, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமல தாசன் என்ற பழம், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.