கல்லூரிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டி :
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி முதலிடம்
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 02-09-2025 அன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. முதல் அரை இறுதி போட்டியில், தூத்துக்குடி APC மகாலட்சுமி கல்லூரி அணியை 11 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கே.ஆர். கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இரண்டாவது அரை இறுதி போட்டியில்,. திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணியும், தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரி அணியும் மோதின. இதில் 8 -0 என்ற கோல் கணக்கில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் அணியை 5 -1 என்ற கோல் கணக்கில் கே.ஆர். கல்லூரி அணி வெற்றி பெற்றனர்.
முதலிடம் பிடித்த கே.ஆர். கல்லூரி அணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் Rs.48,000/- ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டி, தூத்துக்குடி தருவை விளையாட்டு அரங்கில் 01-09-2025 அன்று நடை பெற்றது. இதில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவன் மாதேஸ் நீளம் தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்று Rs. 3,000/- ரொக்க பரிசும் மற்றும் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவன் ரொனால்ட் அந்தோணி குண்டு எரியும் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்று Rs. 1,000 ரொக்க பரிசும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் தலைவர், துணைதலைவர், கல்லூரியின் தாளாளர் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்., உடற்கல்வி இயக்குனர், பயிற்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.












