தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பெண்கள் ஹாக்கி ஐவர் ஆட்டம் போட்டி
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பெண்கள் ஹாக்கி ஐவர் ஆட்டம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் பத்து அணிகள் பங்கு கொண்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அருள் சகோதரி முனைவர். ரூபா துவங்கி வைத்தார். இப் போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் தங்கமலர் பயிற்சியாளர் ஜார்ஜ் ஈஸ்டர் ஏற்பாடு செய்திருந்தனர்.












