” ப ” வடிவில் வகுப்பறை அமைப்பது சோதனை முயற்சி தான் அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

” ப ” வடிவில் வகுப்பறை அமைப்பது சோதனை முயற்சி தான் அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை :
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டங்களில் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது மாணவர்களின் புரிதல் திறனை அறியவே மாநில அடைவு தேர்வு ( SLAS – ஸ்டேட் Level Achivement Survey ) நடத்தப்படுகிறது. கேள்வி கேட்கும் அளவிற்கும், தான் கற்றதை பிற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாகவும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், தற்போது “ப” வடிவிலான வகுப்பறை அமைப்பது சோதனை முயற்சி தான். பயனுள்ள இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இது குறித்து அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை என்று கூறினார்.