10 ம் வகுப்பு கணிதம் பாடத்திற்கான பொதுத் தேர்வு:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 22,221 மாணவ, மாணவிகள் எழுதினர்
தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 11ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.
16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.

இன்று 25 – 03 – 2026 புதன்கிழமை கணிதம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
இன்று நடைபெற்ற கணிதம் பாடத்திற்கான தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 22,221 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதில் தேர்வுக்காக பள்ளியில் பயிலும் மாணவர்கள் 22,220 பேரும், தனித் தேர்வர்கள் 515 பேர் என மொத்தம் 22,735 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்றைய தேர்வினை 22,221 பேர் எழுதினர்.இதில் மாணவர்கள் 11,031பேர், மாணவிகள் 11,190 உள்ளடங்குவர்.

இன்று 514 பேர் தேர்வு எழுத வரவில்லை.இதில் மாணவர்கள் 372 மாணவிகள் 142 பேர் ஆகும்.
இன்று தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி, சி.எம்.மேல்நிலைப் பள்ளி, கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் இன்பன்ட் ஜீசஸ் ஆகிய பள்ளிகளில் இருந்து மொத்தம் 273 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதினர்.













