நீட் பிஜி – 2025 தேர்வு : தொலைதூர மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை மாற்றி அமைக்க வேண்டும் : மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் வலியுறுத்தல்

நீட் பிஜி – 2025 தேர்வு : தொலைதூர மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை மாற்றி அமைக்க வேண்டும் :
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் வலியுறுத்தல்

ஆகஸ்ட் 3 ஆம் தேதி NEET-PG 2025 தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் பல தேர்வர்களுக்கு தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம்–ஜூனியர் டாக்டர்ஸ் நெட்வொர்க் (IMA-JDN) மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதி, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சில மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே மையங்களைப் பெற்றிருந்தாலும், ஏராளமான மாணவர்களுக்கு தொலைதூர மாநிலங்களில் இடங்கள் ஒதுக்கப்பட்டதால், அவர்கள் நீண்ட மற்றும் செலவு மிகுந்ந பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. என்பதை சங்கம் எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும் இது தேர்வர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.