தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் தேசிய கல்வி தினம்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் தேசிய கல்வி தினம்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சிறந்த கல்வியாளருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ரோசம்மாள் கல்வியியல் கல்லூரி, வ.உ.சி. கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியைகள் இந்து இசக்கி, திவ்யா. உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.