தூத்துக்குடி S.A.V. மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தூத்துக்குடி S.A.V. மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தூத்துக்குடி, S.A.V மேல்நிலைப்பள்ளியில், நேற்று (23 பிப்ரவரி 2026) திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் மேல்நிலை மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மாரியப்பன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக திருச்சி Army Recruitment Office யை சார்ந்த சுபேதார் திரிபாதி  (Army Recruitment Office, ARO -Tiruchi.),  கார்த்திகேயன் ( Civil Defence Staff ) கலந்து கொண்டு இராணுவத்தில் சேர்வதற்கான கல்வி மற்றும் உடல் தகுதி விதிமுறைகள், பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவாகமாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

நிகழ்ச்சி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்தை மாணவர்களுக்கு வழங்கும் விதமாக இருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவர்க்கும் நன்றி பாராட்டினர்.