கீழ ஈரால் தொன் போஸ்கோ கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான “Grammarian Award 2026” ஆங்கில இலக்கணப் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி, மாவட்டம் கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆங்கிலத் துறை சார்பில் பள்ளிகளுக்கிடையேயான “Grammarian Award 2026” எனும் ஆங்கில இலக்கணப் போட்டி 26.02.2026 அன்று போஸ்கோ அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

கல்லூரி செயலாளர் அருட்தந்தை முனைவர். ராஜதேவன், கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை முனைவர்.ரோசாரியோ ஆன்டனி, முதல்வர் முனைவர்.பிரபு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
ஆங்கிலத் துறைத் தலைவர் அருட்தந்தை முனைவர். திவ்விய அலெக்ஸாண்டர் தலைமையில் போட்டி நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மொத்தம் 17 அணிகள் முன்னிலைத் தேர்வில் (Preliminary Round) கலந்து கொண்டன. அதில் 5 அணிகள் முதன்மை வினாடி வினா சுற்றுக்கு (Main Quiz) தகுதி பெற்றன.

முதல் பரிசு மற்றும் வெற்றியாளர் கோப்பையை விளாத்திகுளம் CARM பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றது. இரண்டாம் பரிசை ஜி.கே. வினாயகம் பள்ளி பெற்றது.
மூன்றாம் பரிசை தூத்துக்குடி செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி பெற்றது.நான்காம் பரிசை எட்டயபுரம் CKT மெட்ரிக் பள்ளி மற்றும் தூத்துக்குடி செயிண்ட் தோமஸ் பள்ளி ஆகியவை பெற்றன.
போட்டி முழுவதும் மாணவர்கள் தங்கள் ஆங்கிலத் திறனையும் இலக்கண அறிவையும் சிறப்பாக வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன், அனைத்து பங்கேற்பாளர்களும் பாராட்டப்பட்டனர்.
பரிசளிப்பு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.












