தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று தேசிய அறிவியல் தின வார விழாவை முன்னிட்டு வானவில் மன்றம் சார்பாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அதில் பள்ளித் தலைமை ஆசிரியை பிரேமா மற்றும் வானவில் மன்ற கருத்தாளர் விஜி மற்றும் சிறப்பு ஆசிரியர் ஆப்பிள் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

கண்காட்சியில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் படைப்புகளாக காட்சிப்படுத்தப்பட்டன அறிவியல் தின வார விழாவில் மாணவர்கள் அறிவியல் அனைவருக்கும் பொதுவானது என்ற குறித்த உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.