தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் காசநோய் இல்லாத இந்தியா : மருத்துவர்கள் கலந்துரை

தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் காசநோய் இல்லாத இந்தியா :
மருத்துவர்கள் கலந்துரை

25-09-2025 அன்று தூத்துக்குடி  ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டம் (அணி எண்கள் 47&57) சார்பாக 25 – 09 – 2025 காலை 10-30 மணியளவில் மாணவிகளுக்கு காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு காசநோய் இல்லாத இந்தியா என்ற தலைப்பில் மருத்துவர்கள் கருத்துரை வழங்கினர்.

டாக்டர். சுந்தர லிங்கம் மருத்துவ சேவையில் துணை இயக்குநர் (TB), தூத்துக்குடி மாவட்டம்  மோகன் மாவட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர், முத்துக்குமார் சுகாதார கல்வியாளர், ராய் சிகிச்சை மேற்பார்வையாளர் ஆகியோர் சிறப்புரை நல்கினர்.

இந் நிகழ்விற்கான ஏற்பாடுகளை முனைவர். ஸ்டெல்லா வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.புஷ்பகவல்லி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் செய்திருந்தனர்.