ஆசிரியர்களை எந்த சூழ்நிலையிலும் அரசு கைவிடாது : முதல்வர் ஸ்டாலின் உறுதி

ஆசிரியர்களை எந்த சூழ்நிலையிலும் அரசு கைவிடாது :
முதல்வர் ஸ்டாலின் உறுதி

2011 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வுகளை போக்கும் வகையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் ஆசிரியர் சங்கம் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி முதல்வரை நேரில் சந்தித்து கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைத்து முதல்வர் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெற்றார்.

அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு ஆசிரியர்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்று உறுதியளித்தார்.