12 ம் வகுப்பு பொதுத் தேர்வு : இன்று 10 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது: தூத்துக்குடி மாவட்டத்தில் 11,618 மாணவ – மாணவியர்கள் தேர்வு எழுதினர்

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு :
இன்று 10 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 11,618 மாணவ – மாணவியர்கள் தேர்வு எழுதினர்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 2’ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று உயிரியல், தாவரவியல்,வரலாறு,வணிக கணிதம் உட்பட 10 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.

இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பித்த தேர்வுகள் நண்பகல் 1.15 வரை நடைபெற்றது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் 11,405 பேரும்,தனித் தேர்வர்கள் 383 பேர் என மொத்தம் 11,788 பேர் விண்ணப்பித்திருந்த சூழ்நிலையில் இன்று பள்ளியில் படித்து வரும் 11,278 மாணவர்கள் , தனித்தேர்வுகள் 340 மாணவர்கள் என மொத்தம் 11, 618 பேர் தேர்வினை எழுதினர்.170 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உயிரியல் ( Biology ), தாவரவியல் ( Botany ), வரலாறு ( History ) வணிக கணிதம் (Buisness Mathamatics & Statistics )மற்றும் அலுவலக மேலாண்மை மற்றும் செயலகப் பணி (Office Management and Secretaryship) என 5 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 98 மாணவிகள் தேர்வு எழுதினர்.

தேர்வுக்கான தேர்வு மைய ஏற்பாடுகளை தலைமையாசிரியை அருட் சகோதரி.சகாய ஹேமலதா ஜெயந்தி , தாளாளர் பெர்னபெத் மேரி, வேதியல் ஆசிரியை அருட் சகோதரி நம்பிக்கை மேரி, வேதியல் ஆசிரியை செசிலியா, விலங்கியல் ஆசிரியைகள் சகாய ஆனந்தி விண்ணரசி, ஏஞ்சல் விட்டோரியா, வரலாறு ஆசிரியை அருட் சகோதரி பியூலா, தாவரவியல் ஆசிரியை எழில் சுஜிதா மற்றும் தொழிற் கல்வி ஆசிரியை ஜெனோவியா ஆகியோர் செய்திருந்தனர்.