ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் ‘தொல்லியலும் சுவடியியலும்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம்

ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்
‘தொல்லியலும் சுவடியியலும்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம்

தூத்துக்குடி, ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 19.09.2025 அன்று முதுகலை மற்றும் தமிழாய்வு மையம் சார்பாக ‘தொல்லியலும் சுவடியியலும்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் மல்லிகா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர், முனைவர். சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

முற்பகல் நிகழ்வில் பயிற்சியாளர் மாணிக்கம் (தொல்லியல் கழக செயலாளர், சிவகளை) தொல்லியல் பொருட்களை கண்டுபிடித்தல், எவ்வாறு கால வகைப்படி பிரிக்கலாம் எனவும் பொருள்களை பாதுகாக்கும் முறை குறித்தும் பயிற்சி அளித்தார்.

பிற்பகல் நிகழ்வில் பயிற்சியாளர் முனைவர். தாமரைப் பாண்டியன் (உதவிப்பேராசிரியர்,உலகத்தமிழராய்ச்சி நிறுவனம்,சென்னை) சுவடியியல் எழுத்து வகைப்பாடுகள் அவற்றை எழுதும் முறை, படிக்கும் முறை குறித்து பயிற்சி அளித்தார். முனைவர்.புஷ்பகவல்லி (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை) நன்றியுரை நல்கினார்.

இந்நிகழ்வில் 145 மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் செல்வலதா, முனைவர். விஜயலட்சுமி, முனைவர். புஷ்பகவல்லி, முனைவர்.வாசுகி ஆகியோர் இணைந்து செய்திருந்தன.