அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிசம்பர் – 22 ல் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிசம்பர் – 22 ல் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22.12.2025 திங்கள்கிழமை அன்று பொதுப்பணி , நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை , தலைமைச் செயலகம் செயலகம் , நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 -வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கம் நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.