காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தியன் லீகல் அசோசியேசன் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா : மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பிரையன்ட் நகரில் உள்ள நல்லாயன் செவித்திறன் குறைந்ததற்கான பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தியன் லீகல் அசோசியேஷன் சார்பில் நலத்த்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் , இந்தியன் லீகல் அசோசியேசன் தலைவரும் வழக்கறிஞருமான பிரியா, வழக்கறிஞர் பார்த்திபன்,கழக நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.













