பொறியியல் கவுன்சிலிங் முடிவடைந்தது : 80 சதவீதம் இடங்கள் நிரம்பியது : 36,446 இடங்கள் காலி

பொறியியல் கவுன்சிலிங் முடிவடைந்தது :
80 சதவீதம் இடங்கள் நிரம்பியது :
36,446 இடங்கள் காலி

பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது. 80 சதவீத இடங்கள் நிரம்பிய நிலையில், 36,446 இடங்கள் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 423 பொறியியல் கல்லுாரிகளில், 2025 – 26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், கடந்த மாதம், 7ம் தேதி துவங்கிய நிலையில் சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவில், மொத்தம் உள்ள 1,90,624 பி.இ., – பி.டெக்., இடங்களில், 1,45,481 இடங்கள் நிரம்பின.

அதன் பின் பொறியியல் துணை கவுன்சிலிங், கடந்த 21ம் தேதி துவங்கியது. இதில், 7,964 மாணவ – மாணவியருக்கு, பி.இ., – பி.டெக்.,இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் எஸ்.சி., – எஸ்.சி.ஏ., பிரிவினருக்கான கவுன்சிலிங், கடந்த 25ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், 729 மாணவ – மாணவியருக்கு, பொறியியல் ‘சீட்’ ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொழிற்கல்வியில், நான்கு பேருக்கு சீட் ஒதுக்கப்பட்ட நிலையில்
பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது.

மொத்தமுள்ள 1,90,624 இடங்களில், 1,54,178 இடங்கள் நிரம்பியுள்ளன. இது மொத்த இடங்களில், 80 சதவீதம் ஆகும்.

மேலும் 36,446 இடங்கள் காலியாக உள்ளன.
இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 18 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இவற்றை ஏற்கனவே உள்ள, ‘உயர்வுக்கு படி’ திட்டத்தின் வழியே, நிரப்பிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.