அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறுகிறது
அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
சிவில் (civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (Electrical and Electronics), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் (Electronics & Communication) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டிப்ளமோ படிப்புகள் அரசினர்பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவ மாணவியர்கள்: https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சேவை மையம்
மாவட்ட சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
பதிவு கட்டணம்
பதிவுக் கட்டணமாக ரூ150/-யை விண்ணப்பதாரர் Debit Card /Credit Card/Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம்.
SC/ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் இல்லை
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு 07.05.2025 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இறுதி நாள் பதிவு செய்ய இறுதி நாள்: 23.05.2025 ஆகும்.












