தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி, ஜூலை 28, 2025, தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு விலங்கியல் துறை சார்பில் “இயற்கையின் அருளை மதித்திடுவோம்” என்ற தலைப்பில் கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர்,முனைவர். சுப்புலட்சுமி வழிகாட்டுதலின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி மதியம் 1.20 மணிக்கு தொடங்கியது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர் சுற்றுச்சூழல், MR-IMS மற்றும் SCSMS, தரங்காதரா ரசாயனத் தொழிற்சாலை, சாகுபுரம் பொதுமேலாளர் ரவிகுமார் – க்கு நினைவுப்பரிசை கணிதத்துறை உதவிப் பேராசிரியர், மற்றும் தேசியத் தர வரிசை மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மகேஸ்வரி வழங்கினார்.
சாகுபுரம் தரங்காதரா ரசாயனத் தொழிற்சாலை, சுற்றுசூழல் பொறியாளர் முனைவர். கற்பக விநாயகத்திற்கு நினைவுப்பரிசை முனைவர். முத்துக்கனி, விலங்கியல் துறைத் தலைவர் முனைவர். முத்துக்கனி வழங்கினார். விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். சக்திகா வரவேற்புரை வழங்கினார்.
முக்கிய விருந்தினர்களை விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் சுதந்திரா கார்த்தி அறிமுகம் செய்தார்.
மதியம் 1.30 மணி முதல் 3.15 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியின் முடிவில் மாணவிகள் இயற்கையை பாதுகாக்க உந்தும் சத்தியத்தை எடுத்தனர்.
முக்கிய உரையாளர்களின் கேள்விகளுக்குச் சிறப்பாக பதிலளித்த இளங்கலை மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவிகள் வேணி ஸ்ரீ, மாரிசெல்வி, கேஷியா, காயத்ரி மற்றும் இரண்டாம் ஆண்டு இளங்கலை அறிவியல் மாணவி மாரீஸ்வரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி கேஷியா தனது கருத்துக்களை பகிர்ந்தார்.
இந்நிகழ்வு மாணவிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, இயற்கையை பாதுகாக்கும் பொறுப்பை உணர்த்தியது.












