வடகிழக்கு பருவமழை: மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 22 – 10 – 2025 ) விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை:
மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 22 – 10 – 2025 ) விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் , விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.