நெல்லை சதக்கத்துலாஹ்கல்லூரி மாணவிகளின் மனிதநேயம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் மனிதம் மாணவர் சேவை அமைப்பின் சார்பாகக் கல்லூரி முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று *(29/06/2025)*
பாளையங்கோட்டை பகுதிகளில் பசியால் வாடி தவித்து வரும் ஆதரவற்ற நபர்களுக்கு கல்லூரியில் பயிலும் ஆங்கிலத்துறை முதலாம் ஆண்டு மாணவிகள் இன்று மதிய உணவுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மனிதம் மாணவர் சேவை அமைப்பின் உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.












